Site icon அநேகன்

இரண்டாவது தங்கம் வென்ற தவனேஸ்வரன்!

கோலாலம்பூர், செப்.20-
தலைநகரில் நடைபெற்றுவரும் 9ஆவது பாரா ஆசியான் போட்டியில் தேசிய ஓட்டப்பந்தய வீரரான எஸ்.தவனேஸ்வரன் 100 மீட்டர் ( டி42/43/44) பிரிவில் தங்கம் வென்றார்.

அவர் வெறும் 12.06 விநாடிகளில் ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்து தங்கத்தை வென்றார். இரண்டாம் நிலையில் இந்தோனிசியாவை சேர்ந்த ரஷிடி 12.08 விநாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து வெள்ளி பதக்கத்தை வென்றார். மூன்றாம் நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த உவாம்சாமுட் சுதிஸ் 12.52 விநாடிகள் பதிவு செய்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்த முடிவின் வாயிலாக தவனேஸ்வரன் வென்ற இரண்டாவது தங்கம் இதுவாகும். நேற்று அவர் 400 மீட்டர் (டி44) பிரிவில் தனது முதலாவது தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version