சென்னை, செப், 21
பிரபல ஆர்ட் டைரக்டர் ஜி.கே. மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார் . இவருக்கு வயது 60.
பிரபல நடிகர்கள் ரஜினி உள்பட நடித்த படங்களுக்கு கலை இயக்குகனராக பணியாற்றியுள்ளார். வம்சம் தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி முன்னணி நாடகங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடந்திருந்தார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உடல் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது
