Site icon அநேகன்

ரோஹிங்யா மக்கள் மிருகங்கள் அல்ல ! – அஹ்மாட் சாஹிட்

மணிலா, செப்.21 – 

மியான்மாரில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் ரோஹிங்யா மக்கள்,  மிருகங்கள் அல்ல என்பதை ஆசியான் சமூகம் உணர வேண்டும் என  துணைப் பிரதமர்  டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிடி ஹமிடி நினைவுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை மணிலாவில் நடைபெற்ற எல்லைக் கடந்த குற்றச்செயல்கள் தொடர்பான ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தில் அஹ்மாட் சாஹிட் ஆவேசத்துடன் கூறியபோது கூட்டம் நடைபெற்ற அறை ஒரு நிமிடம் அமைதியானது.

ரோஹிங்யா மக்களுக்காக அனைத்துலக அமைப்புகள் வழங்க முன் வரும் மனிதநேய உதவிகளுக்குன் மியான்மார் அரசாங்கம் தொடர்ந்து தடை விதித்து வருவதை துணைப் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

மியான்மார் பாதுகாப்பு படையினர் ஈவு இரக்கமின்றி குழந்தைகளையும் பெண்களையும் கொன்று வருவதாக அஹ்மாட் சாஹிட் குற்றஞ்சாட்டினார். சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், ரக்கினே மாநிலத்தில் நடந்து வரும் பிரச்சினைக்கு மியான்மார் அனைத்துலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட சட்டத்திற்கு ஏற்பட்ட நடந்து கொள்ள வேண்டும் என சாஹிட் நினைவுறுத்தினார்.

 

Exit mobile version