Site icon அநேகன்

சாமி 2 படத்தில் விக்ரமுடன் முன்னணி நட்சத்திரங்கள் !

சென்னை, செப்.21 –

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்துக்கு முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட்ட ‘சாமி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.டைப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விக்ரமின் `இருமுகன்’, படத்தை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் முதல் பாதி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இரண்டாவது பாகத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Exit mobile version