பெட்டாலிங் ஜெயா, செப். 22-
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.சிவராசாவின் மூன்று உதவியாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று கைது செய்தது.
குடிநுழைவு தொடர்பாக 20,000 வெள்ளியை அவர்கள் பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட அந்த மூவரும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் உதவியாளர்கள் என உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளையில், இந்த செய்தியை உறுதிபடுத்த எஃப்எம்டியை தொடர்பு கொண்டபோது, உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதை உடனடியாக உறுதிப்படுத்த சிவராசா மறுத்துவிட்டார்.
இன்னும் 2 மணி நேரத்தில் நான் அறிக்கை வெளியிடுவேன், அதைப் பற்றி அனைவருக்கும் பதிலளிப்பேன் என்று சிவராசா குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்கலில் 45 வயதுடைய அரசியல் செயலாளர் ஒருவரும் அடங்குவார். நேற்று நண்பகலில், செராசில் உள்ள ஓர் உணவகத்தில் சிவராசாவின் தனிப்பட்ட உதவியாளரும் ஓர் அலுவலரும் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர் அந்த அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை எம்ஏசிசி உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
