Site icon அநேகன்

டத்தோ கலையரசுவின் சகோதரர் தனபாலன் மறைவு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இறுதி மரியாதை செலுத்தினார் 

காஜாங், மே 13-டிகே மலேசியா சங்கத்தின் தோற்றுனர் டத்தோ எம்டி கலையரசுவின் இளைய சகோதரர் தனபாலனின் இறுதிச் சடங்கில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

சகோதரரை இழந்த கலையரசு மற்றும் அவரின் குடும்பத்தாருக்குடான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  ஆறுதல் கூறினார்.

மஇகா தாமான் டேசா பிரிமா கிளையின் துணைத் தலைவரான தனபாலன் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தொன்றில் அகால மரணமுற்றார்.

இவரின் இறுதிச் சடங்கு இங்குள்ள தாமான் ஸ்ரீ மேவாவில் நேற்று காலை 11.00 மணிவாக்கில் நடைபெற்றது.

இதில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன், டத்தோ முனியாண்டி, டத்தோ ரவிச்சந்திரன், டத்தோ சிவராஜ், டத்தோ தினாளன், மத்திய செயலவை உறுப்பினர் அண்ட்ரூ டேவிட், ஐபிஎஃப் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ்குமார் சம்பந்தன், உட்பட பல அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

அன்னாரின் நல்லுடல் செராஸ் மின் சுடலையில் பின்னர் தகனம் செய்யப்பட்டது.

Exit mobile version