பட்டர்வொர்த், மே 14-பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு எதிராக 859,000 ரிங்கிட் உள்ளடக்கிய 17 அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
2010இல் இருந்து 2023ஆம் ஆண்டு வரை பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவராக இருந்தபோது அவர் அக்குற்றங்களைப் புரிந்ததாகவும் அதில் 13 குற்றச்சாட்டுகள் தங்க ரதத்திற்கு தங்கப் பட்டைகள் வாங்கப்பட்ட முறைகேடும், மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கல்வி உதவி நிதி, சுகாதார உதவியை வழங்கியபோதும் புரியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தம் மீதான எல்லா குற்றச் சாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், கூடியபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனை, பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மொத்தம் 78,000 ரிங்கிட் தொகையில் பேராசிரியர் இராமசாமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

