Site icon அநேகன்

கிளைத் தலைவரை ராஜினாமா செய்யும்படி கூறுவதா?  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்! ஃபஹ்மி எச்சரிக்கை 

கோலாலம்பூர், மே 16-கிளைத் தேர்தலில் வெற்றி பெற்ற கிளைத் தலைவரை ராஜினாமா செய்ய கூறி அச்சுறுத்திய கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி பாட்சில் எச்சரிக்கை விடுத்தார். 

இது போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கை தேர்தல் சுமூகமாக நடைபெறுவதைத் தடை செய்கின்றது.

அதோடு, பிகேஆர் கட்சியின் அமைதியைச் சீர்க்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் ஃபஹ்மி விளக்கமளித்தார்.

மேலும், வெற்றி பெற்ற கிளைத் தலைவர்களிடம் ராஜினாமா செய்ய கூறும் கிளை உறுப்பினர்கள் கட்சியின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று ஃபஹ்மி எச்சரிக்கை விடுத்தார்.

அவர்களால் மறு தேர்தலில் போட்டியிட இயலாது என்றும் ஃபஹ்மி திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, கிளைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற தலைவரைப் பிடிக்காத நிலையில் அவரை பதவியிலிருந்து கிளை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய கூறி அச்சுறுத்தியதாக பிகேஆர் கட்சியின் பொது செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே கூறியிருந்தார்.

Exit mobile version