கோலாலம்பூர், மே 16-தற்போது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓவ்வூதியத் தொகை மாதாந்திர ரீதியில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓய்வு பெறுவோர் ஒரு வீட்டையோ அல்லது வர்த்தகத்தையோ மேற்கொள்ள அதிக பணம் தேவைப்படுவதால், ஓய்வூதியத் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டு அவர்களுக்கு வழங்க வேண்டுமென தொழிலாளர் சங்கம் ஒன்று கோரிகை விடுத்திருந்தது.
அதிற்குப் பதிலளித்த பொதுச் சேவை இலாகா தலைமை இயக்குநர் வான் அமாட் டஹ்லான் அப்துல் அஸிஸ், ஓய்வூதியத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே பெற்றுக் கொண்ட பின்னர், எஞ்சிய தொகையானது மாதாந்திரமாக செலுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நடவடிக்கையானது பண மோசடியில் ஓய்வு பெற்றோர் பலர் சிக்கி, சேமிப்பை இழப்பதைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

