Site icon அநேகன்

எம்எஸ்எஸ்எம் குறுக்கோட்ட போட்டி: திரிஷிதா தங்கம் வென்று சாதனை! 

அலோர்காஜா, மே 17-இங்கு நடைபெற்ற மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியின் (எம்எஸ்எஸ்எம்) குறுக்கோட்ட பிரிவில் திரிஷிதா யோகேஸ்வரன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இதன் வழி கோல சிலாங்கூர் ,பண்டார் புஞ்சாக் அலாமைச் சேர்ந்த திரிஷிதா சிலாங்கூர் மாநில விளையாட்டு அணிக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டி அலோர்காஜாவில் அமைந்துள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (யுஐடிஎம்) அண்மையில் நடைபெற்றது. 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான போட்டியில் 15.12 வினாடிகளைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வாகை சூடினார் திரிஷிதா.

2025 ஆம் ஆண்டு மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியின் (எம்எஸ்எஸ்எம்) குறுக்கோட்ட பிரிவில் தங்கம் வென்ற திரிஷிதாவை கோல சிலாங்கூர் தொகுதி மக்கள் நீதி கட்சியின் (கெஅடிலான்) தலைவரான சிவபாலன் முகுந்தன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

திரிஷிதா விளையாட்டு துறையில் பல சாதனைகள் புரிவதற்குத் தன்னால் ஆன உதவிகள் புரிய தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்தார் சிவபாலன்.

 

 

Exit mobile version