புத்ரா ஜெயா, மே 17-மலேசிய கணக்காயர் அலுவலகத்தில் கோரப்படாத பணம் 1,330 கோடி ரிங்கிட் இருப்பதாகத் தலைமை கணக்காயர் நோர் யாத்தி அமாட் தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகம் தொடங்கப்பட்ட 1977ஆம் ஆண்டிலிருந்து வெறும் 400 கோடி ரிங்கிட் மட்டுமே உரியவர்களால் கோரப்பட்டு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
காலமாகி விட்டவர்களின் வாரிசுகள் பெரும்பாலோர் அந்தக் கோரப்படாத் நிதி பற்றி தெரிந்திருக்காமல் இருக்கலாம் அல்லது பொதுமக்கள் தங்களின் பணம் எதுவும் கணக்காயர் அலுவலகத்தில் வரவு வைக்கப்படிருப்பதை அறிந்து கொள்ளாமலும் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆக பொதுமக்கள் இதில் கவனத்தைச் செலுத்தி, தங்களின் பணம் இந்த அலுவலகத்தில் இருந்தால் அதனைக் கோரி பெறலாம் என்று நோர் யாத்தி கேட்டுக் கொண்டார்.

