புத்தாத்தான்- மே 18-சபாவில் இவ்வாண்டு புறநகர் பகுதிகளை மேம்படுத்துவதற்காக 1.11 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.
வட்டார மற்றும் புறநகர் மேம்பாட்டு துறையின் இந்த ஒதுக்கீடு கிராமப்புற சாலை நிர்மாணிப்பு, மின்சார விநியோகம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சமூக அடிப்படை வசதி திட்டங்களை உள்ளடக்கியிருக்கும் என்றார் இதன் அமைச்சருமான அகமது ஜாஹிட்.
இம்மாநிலத்தில் அடிப்படை வசதி திட்டங்கள், பொருளாதாரம், கல்வி மற்றும் புறநகர் இலக்கவியல் ஆகிய துறைகளில் நீண்ட இடைவெளி இன்னும் காணப்படுவதாகவும் இது அவசியம் களையப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .
இந்த இடைவெளியைக் குறைக்க மக்களுக்கு மிகவும் பயனான இத்திட்டங்களை மேற்கொள்ள வட்டார மற்றும் புறநகர் மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாக நேற்றிரவு இங்கு தலைவர்களுடன் மடானி கிராம பரிவு திட்டத்தை முடித்து வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

