செபராங் பிறை மே 18-வட மலேசிய தமிழ் நிருபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் தமிழ் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பினாங்கு லைட் ஹோட்டலில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவை வட மலேசிய தமிழ் நிருபர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் சடையன், செயலாளர் எம்ஜிஆர் தேவன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ இந்த விழாவுக்கு தலைமையேற்று அனைவருக்கும் சிறப்பு செய்தார்.
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மலேசியதமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ் லென்ஸ் செய்தியாளருமான டி. காளிதாஸ், சங்கத்தின் உதவித் தலைவரும் மலேசிய நண்பன் செய்தியாளருமான ஜீவ ராஜா, தமிழ் லென்ஸ் ஆசிரியரும் சங்கத்தின் செயலாளருமான வெற்றி விக்டர், தமிழ் லென்ஸ் செய்தியாளரும் சங்கத்தின் உதவித் தலைவருமான காளிதாஸ் இளங்கோ ஆகியோர் இடம் பெற்றனர்.
இவர்களோடு, பினாங்கு மாநில மக்கள் ஓசை நிருபர் குணாளன், நிருபர் ரமணி, மக்கள் ஓசை நிருபர் முருகையன், தமிழ் மலர் மெத்தியூஸ், வெளிச்சம் கணபதி, பெர்னாமா ரச்சா, பிரிதிப் , சத்யா பிரான்சிஸ், வீரா மணியம், சிங்கப் பெண்ணே விஜயஸ்ரீ ஆகியோரும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
பினாங்கு மாநில குற்றச் செயல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைவர் டத்தோஸ்ரீ கா.புலேந்திரன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் பொருளாளர் ஆறுமுகம் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

