Site icon அநேகன்

ஆலய வழிபாட்டு தலத்தைச் சேதப்படுத்திய நபர் கைது

அம்பாங், மே 19-இன்று காலை 8.29 மணியளவில் அம்பாங் தாமான்ஸ்ரீ அம்பாங் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து வழிபாட்டு இடத்தை சேதமாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தெரிவித்த அம்பாங் ஜெயா ஓசிபிடி முகமட் அஸாம் இஸ்மாய்ல், அந்த நபர் சில ஆயுதங்களோடு ஆலயத்தில் நுழைந்து அதனை சேதப்படுத்தியதோடு செயலாளரின் தலையைச் சீவப் போவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த 33 வயது வேலையில்லா நபர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version