Site icon அநேகன்

இளைஞர் மாநாட்டைப் புறக்கணித்தால் ரபிஸியின் அரசியல் வாழ்விற்கு சிக்கல்! 

பெட்டாலிங் ஜெயா, மே 20-இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் பிகேஆரின் இளைஞர், மகளிர் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைக்க ரபிஸி ரம்லி செல்லவில்லை என்றால், இது அவரின் அரசியல் வாழ்விற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்கள் அது பற்றிக் கூறும்போது, அந்தக் கூட்டத்தை கட்சியின் துணைத் தலைவரே தொடக்கி வைக்கும் நடைமுறையை ரபிஸி ரம்லி மதிக்காமல் போனால், கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

ரபிஸியின் சிறு பிள்ளைத்தனமாக போக்கு அவரின் தேர்தல் பரப்புரைக்கான ஆதரவையும் துணைத் தலைவர் பதவியின் வெற்றிக்குச் சிக்கலையும் ஏற்படுத்தும் என்று வலியுறுத்தப்படுகிறது.

 

Exit mobile version