கோலாலம்பூர், மே 21-2002ஆம் ஆண்டு பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிப் கப்பலை வாங்கிய பேரத்தில் தாம் சம்பந்தப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கோர்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பலை 120 கோடி அமெரிக்க டாலரில் கொள்முதல் செய்ததில் நஜிப்பும் அவரது நண்பர் அப்துல் ரஸாக் பகிண்டாவும் பெரும் ஊழல் செய்து கோடிக் கணக்கில் லாபம் சம்பாதித்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் செய்தியை அடுத்து, நஜிப்பின் வழக்கறிஞர் நிறுவனமான ‘Messrs Shafee & Co ‘நிறுவனம் நஜிப்பின் சார்பில் அதனை மறுத்துள்ளது.
இதற்கு முன்னர், இந்த நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் சம்பந்தமாக இங்கு வந்த மங்கோலிய அழகி அந்தான்துயா ஷாரிபு, குண்டு வைத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நஜிப் ரசாக்கும் ரஸாக் பகிண்டாவும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

