Site icon அநேகன்

ராயல் அறிவியல் சொசைட்டியின் கெளரவ உறுப்பினரானார் டாக்டர் ரவிகாதேவி! 

புத்ரா ஜெயா, மே 21-மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ரவிகாதேவி சம்பந்தமூர்த்தி என்பவர் லண்டன் ராயல் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் வழி அதனைப் பெறும் முதல் மலேசியர் என்ற பெருமையை நாட்டிற்குத் தேடித் தந்துள்ளார் டாக்டர் ரவிகாதேவி.

இவ்வாண்டு ஜூலை 11ஆம் தேதி லண்டனில் உள்ள ராயல் அறிவியல் சொசைட்டியின் வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டு மலேசியாவிற்கு அந்தப் பெருமையைத் தேடித் தருவார் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 90 பேர் மேற்கண்ட சொசைட்டியின் கெளரவ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version