கோலாலம்பூர், மே 22-
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளின் ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதில் அரசு பாகுபாடு காட்டக் கூடாதென மலேசிய தேசிய மனிதவள உரிமைக் குழு (ஹாக்காம்) அறைகூவல் விடுத்துள்ளது.
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் ஜுலை 2லும், மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் ஜூலை 1லும், கூட்டரசு நீதிமன்ற மூத்த நீதிபதி நளினி பத்மநாதன் ஆகஸ்டு 22லும் பணி ஒய்வு பெறுகின்றனர்.
இந்நிலையில் பணி ஓய்வு பெறவிருக்கும் மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷி, சபா, சரவாக் தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி ஆகியோருக்கு 6 மாத காலத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மேற்கண்ட கூட்டரசு நீதிமன்ற 3 நீதிபதிகளுக்கு இன்னும் பதவி நீட்டிப்பு தரப்படவில்லை என்பது வருத்ததை அளிப்பதாக ஹக்காம் தலைர் எம். ராமசெல்வம் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் கால நீட்டிப்பில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் நீதித் துறையின் சுதந்திரத்தில் அரசு மெத்தனப் போக்கைக் காட்டக் கூடாதென்றும் தனது நேர்மையைக் காட்ட மேற்கண்ட உச்சமன்ற நீதிமன்ற நீதிபதிகளின் ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென ராமசெல்வம் வலியுறுத்தியுள்ளார்.

