Site icon அநேகன்

மெலாயு டவ்லாட் பேரணி: சோகோ பேரங்காடிக்கு அருகில் நடத்த அனுமதியில்லை! 

கோலாலம்பூர், மே 23-   மலாய்க்காரர்களின் மேன்மையை வலியுறுத்தும்  ‘ஹிம்புனான் மெலாயு பெர்டாவ்லாட்’ எனும் பெயரில் நாளை தலைநகரில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேரணி சோகோ பேரங்காடி சதுக்கத்தில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மீ அபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

அந்தப் பேரணி சோகோ பேரங்காடியிலிருந்து சற்று தூரத்தில் நடத்தப்பட அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அதன் பாதுகாப்பிற்கு 80 போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலாய்-முஸ்லிம்களின் நலனை கவனிக்கத் தவறியிருக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து இந்தப் பேரணியானது மலாய் அரசு சாரா இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக பெர்காசா அமைப்பின் தலைவர் சைட் ஹசான் சைட் அலி குறிப்பிட்டார்.

 

Exit mobile version