கோலாலம்பூர், மே 23-புதிய ஆதாரங்களின் அடிப்படையில் மறைந்த அம்னோவின் முன்னாள் பொருளாளர் துன் டாய்ம் ஸைனுடின் மற்றும் அவரின் குடும்பத்தினரின் விலையுயர்ந்த சொத்துகளைப் பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இது பற்றிக் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இது பகல் கொள்ளை என்றும் நாட்டுக்காக உழைத்த தலைவரின் சொத்துகளை அபகரிக்க நினைப்பது ஏற்க முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது வாழ்நாளில் பல வெளிநாடுகளில் தொழில் செய்து ஈட்டிய பணத்தை மலேசியாவிற்குக் கொண்டுவந்து முதலீடு செய்த சொத்துகளை, அவர் இறந்த பிறகு, தற்காக்க வழியின்றி இருக்கும் அவரது குடும்பத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் மகாதீர் வர்ணித்துள்ளார்.
கடந்த நவம்பரில் காலமான துன் டாய்ம் பல மதிப்புமிக்க சொத்துகளையும், நிறுவனங்களையும் வருவான வரி கணக்கில் காட்டாதது குற்றம் என கூறி, அவர் மீது இதற்கு முன்னர் எம்ஏசிசி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

