Site icon அநேகன்

தேர்தல் தோல்விக்குப் பின்னர் பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் ரபிஸி

ஜொகூர் பாரு, மே 24- ஜொகூர் பாருவில் நேற்று நடைபெற்ற பிகேஆரின்  துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி, நூருல் இஸ்ஸாவிடம் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரபிஸி, தமக்குத் தோள் கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு தமது அரசியல் வாழ்வு இதோடு முடியவில்லை என்றும் பொது வாழ்வில் தாம் ஈடுபட்டு மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தாம் கட்சியில் சேர்ந்தது கட்சியின் போராட்டத்தை இட்டுச் செலதற்காகவே என்றும் தாம் கட்சியில் பட்டம், பதவி, சொத்து எதனையும் சேர்ப்பதற்காக இல்லையென்றும் குறிப்பிட்டார்.

தம்மைத் தோற்கடிக்க பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தப்பட்டாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு முறியடித்து போட்டியிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த இக்கட்டான கால கட்டத்திலும் தமக்கு ஆதரவாக இருந்த ஆதரவாளர்களுக்குத் தாம் நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version