Site icon அநேகன்

பெட்டாலிங் வட்டார மக்களுக்காக 4,260 வேலை வாய்ப்புகள்! 

பெட்டாலிங் ஜெயா,மே 25-சிலாங்கூர் மாநிலம் மனித வள நிரந்தர குழு வாயிலாக இம்மாநில மக்களுக்காக முழுமையான & போட்டியாற்றல்மிக்க பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில் நேற்று  பெட்டாலிங் ஜெயா எம்பிபிஜே பல்நோக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சியில் பேறு குறைந்தோர் உட்பட 4, 260 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.

‘ஜோப்கேர் சிலாங்கூர் ‘ எனும் இந்த நிகழ்ச்சியில் 29 முதலாளிமார்கள் பேறு குறைந்த தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கினர்.

பல்வேறு தரப்பினரின் தேவையை நிறைவேற்றுவதில் தனியார் துறையினர் கொண்ட அக்கறையையே இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது.

அதே சமயம், பொருளாதார மேம்பாட்டு நீரோட்டத்தில் யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த வேலைகள் யாவும் மாதம் 2,000 வெள்ளிக்கு மேல் வருமானம் வழங்கக்கூடியவை.

இக்கண்காட்சியில் பங்கேற்ற மேலும் 82 பேருக்கு சிலாங்கூருக்கு வெளியே வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இந்த வேலை வாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களில் பார்க்சன் கார்பரேஷன், மைடின் பேரங்காடி, கார்சம், லோங்கி மலேசியா, இன்ஃபினிட்டி லோஜிஸ்டிக் & டிரான்ஸ்போர்ட் போன்றவை அடங்கும்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சிகள் மீது இந்த தனியார் நிறுவனங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையே இது காட்டுகிறது.

பெட்டாலிங் மாவட்ட ‘ஜோப்கேர் சிலாங்கூர் ‘ நிகழ்ச்சியில் நிதி நடவடிக்கை, காப்புறுதி, சேவை & நிர்வாகம், வான் போக்குவரத்து, தகவல் & தொடர்பு, போக்குவரத்து, தங்குமிடம் போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பொது மக்கள் பெற்றனர்.

 

Exit mobile version