Site icon அநேகன்

தலைநகரில் அஸாம் பாக்கியை அகற்றக் கோரி பேரணி! 

கோலாலம்பூர், மே 25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் தவணைக் காலத்தை நீட்டிக்கக் கூடாதென்று கூறி பேரணி ஒன்று நேற்று தலைநகர், சோகோ பேரங்காடியிலிருந்து டத்தாரான் மெர்டேக்கா வரை நடத்தப்பட்டது.

அதில் சுவாராம் உரிமை அமைப்பு உட்பட அரசு சாரா இயக்க உறுப்பினர்கள், தேர்தல் மறுமலர்ச்சி இயக்கம், மூடா மற்றும் பிஎஸ்எம் போன்ற அரசியல் கட்சிகளின் 60 பேர் கலந்து கொண்டனர்.

மூடாவின் இடைக்கால தலைவர் அமிரா ஐஸா அப்துல் அஸிஸ் கூறும்போது, எம்ஏசிசியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி அரசு வெளிப்படைத் தன்மையில்லாமல் பல இயக்கங்களை அடக்கி ஒடுக்கக் கூடாதென்று முறையிட்டார்.

தேசிய இளைஞர் கூட்டமைப்பின் ஹம்டான் நோர்டின், 2009இல் மர்மமான முறையில் மரணமடைந்த அரசியல் சேவையாளர் தியோ பெங் ஹோக்கின் விசாரணை முடிவை எம்ஏசிசி மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அஸாம் பாக்கியின் ஒப்பந்த காலத்தை மூன்றாவது முறையாக அரசாங்கம் நீடித்தது முறையற்றது என்று பேரணியினர் குற்றம் சாட்டியதோடு, அவரின் ஒப்பந்தக் காலத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

 

 

Exit mobile version