Site icon அநேகன்

நான் நிம்மதியாக இருக்கிறேன்! ரபிஸி 

கோலாலம்பூர், மே 26-சனிக்கிழமை முடிந்த கட்சியின் தேர்தலை அடுத்து தமது மெளனத்தைக் கலைத்திருக்கும் ரபிஸி ரம்லி, தேர்தலில் தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கெஆடிலான் கட்சி தோன்றுதற்கு முன்னரே தாம் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் மக்களின் சேவையை முன்னிட்டு 16 நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்ததோடு 1எம்டிபி நிதி மோசடி பற்றி இடைவிடாது கேள்வியை எழுப்பியதால் சிறைத் தண்டனையும் தம்மீது விதிக்கப் பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பட்டம் பதவிக்காகத் தாம் பிகே ஆரில் இணையவில்லை என்றும் கட்சியின் கொள்கைகள் மங்கிப் போகாமல் உயிர்பெற்று இருப்பதையே தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தலில் தோற்றதால் தமது அரசியல் வாழ்வு அஸ்த்தமனமாகி விட்டதாகப் பொருள்படாது என்றும் அதனை இறைவனின் கைகளிலேயே விட்டு விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version