Site icon அநேகன்

லாய் மற்றும் தான் ஃபார்மஸிக்கு வெ. 50,000 அபராதம்  

கோல திரெங்கானு, மே 28-பொய்யான விலைப் பட்டியலை வெளியிட்டிருந்த மருந்தகத்திற்கு கோல திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் 50,000 வெள்ளி அபராதம் விதித்தது.

விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியலில் கோட் கோல்ட் பால் மாவின் விலை 89.90 வெள்ளியாக இருக்கும்போது, அதன் ரசீதில் 91.90 எனும் பதிவிடப்பட்ட விலையில் அந்தப் பொருளை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவமானது 2022 மே 25ஆம் தேதி நடந்தாகப் பயனீட்டாளர் பாதுகாப்பு சட்டத்தின்படி அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version