Site icon அநேகன்

ரபிஸி, நிக் நஸ்மியின் முடிவு கொள்கைமிக்கது! துணைப் பிரதமர் ஜாகிட் 

புத்ரா ஜெயா, மே 29-

அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, இயற்கைவளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகிய இருவரின் முடிவானது கொள்கையுடன் கூடிய ஒரு நடவடிக்கை என்பதோடு இது மதிக்கப்பட வேண்டும் என்றும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அகமது ஜாகிட் ஹாமிடி கூறினார்.

ரபிஸி, நிக் நஸ்மி இருவரும் அரசாங்கத்திற்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியிருப்பதோடு அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர் என்றார் துணைப்பிரதமர்.

“இவர்கள் கொள்கை பிடிப்பு உடையவர்கள். பிகேஆர் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அதன்படியே இப்போது செயல்பட்டுள்ளனர். இவர்களின் முடிவை நாம் அவசியம் மதிக்க வேண்டும் “என்று ஜாகிட் கூறினார்.

 

Exit mobile version