Site icon அநேகன்

விடுமுறையிலுள்ள அமைச்சர்களுக்கு மாற்றான நபர்களை பிரதமர் அறிவிக்கலாம்! -சைஃபுடின்

கோலாலம்பூர், மே, 29-

ஒவ்வோர் அமைச்சர்களின் பதவிக்காலம் முடியும் வரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காத்திருக்க வேண்டியதில்லை.

அதற்கு முன்பதாகவே, அவர்களின் பொறுப்புக்கு மாற்றான நபர்களை அறிவிக்க முடியுமென முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா வலியுறுத்தினார்.

அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டத்தோ ஸ்ரீ ரபிஸியும் நிக் நஸ்மியும் விடுமுறையில் உள்ள நேரத்தில், அவர்களுக்கு மாற்றான நபர்களை பிரதமர் அறிவிப்பதற்கு, அதிகாரப்பூர்வ நெறிமுறை ஏதும் தடுக்கவில்லை.

அது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என டத்தோ ஸ்ரீ சைஃபுடின் விளக்கினார்.

அமைச்சர்கள், பொதுச்சேவை ஊழியர்கள் போன்று, பதவி விலகும் விவகாரத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை. ஆகையால், அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் தற்போதே மேற்கொள்ள முடியும்.

அதேவேளையில், டத்தோ ஸ்ரீ ரபிஸி மற்றும் நிக் நஸ்மியின் விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுவிட்டதால், புதிய அமைச்சர்கள், அவர்களின் பணியைத் தொடங்கம் காலத்தை பிரதமர் ஒத்திவைக்கலாம்.

அதன் வழி, ஒரே நேரத்தில் இருவருக்கு சம்பளத்தை வழங்கப்படுவதைத் தவிர்க்க முடியுமென, டத்தோ ஸ்ரீ சைஃபுடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

Exit mobile version