Site icon அநேகன்

ஆஸ்ட்ரோவில் ‘தக் லைஃப் – தி அசெம்பிளி ஆஃப் லெஜண்ட்ஸ்’ பிரத்தியேக சந்திப்பு நிகழ்ச்சியின் நேரலை! 

கோலாலம்பூர், மே 30- தக் லைஃப் – தி அசெம்பிளி ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற சந்திப்பு நிகழ்ச்சியின் முதல் நேரலை ஒளிபரப்பை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் மே 31, 2025 மாலை 5.30 மணிக்கு வழங்குவதில் மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ பெருமிதம் கொள்கிறது.

ஜூன் 5, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி-நாடகத் திரைப்படமான தக் லைஃப்-இன் நடிகர்களான கமல்ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் பங்கேற்கும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

புகழ்பெற்ற நடிகர்கள் திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இது நிச்சயமாக திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் இரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

பிரத்தியேகச் சந்திப்பு நிகழ்ச்சி மட்டுமல்லாது, உள்ளூர் திறமையாளர்களான ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசி மற்றும் விஹாரா ஆர்ட்ஸ் (ஆட்டத்தின் மாபெரும் வெற்றியாளர் மற்றும் இறுதிப் போட்டியாளர்), ருஹன் ரவீந்திரன் மற்றும் திவ்யா கன் இன் சோய் (பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் மாபெரும் வெற்றியாளர் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்), சிவசக்தி உருமி மேளம் மற்றும் ஆர்ஸ்குவேர் டுவின்ஸ் ஆகியோரின் சிறப்பு படைப்புகளையும் ஆஸ்ட்ரோ ஒளிபரப்பும்.

ஊர் சுற்றும் பாய்ஸ் என்றப் பயணத் தொடரிலிருந்துத் தியாகு வஜிரவேல் மற்றும் கிருஷென்ஜித் கருணாநிதி மற்றும் ஹவுஸ் கணவன் என்ற ஆஸ்ட்ரோ விண்மீனின் சமீபத்திய தொடரிலிருந்து பவித்ரா ராஜேந்திரன், சசிகுமார் கந்தசாமி, நித்தியேஸ்வரி ரவி, கிஷோக் குமார் கெரி, கபில் மற்றும் நிஷா ஏஞ்சலிகா உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பைத் தவறவிடாதீர்கள்.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி-நாடகத் திரைப்படமான தக் லைஃப்-இல் கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாராட்டுக்குரிய இயக்குநர் மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில், இரக்கமற்ற கும்பல் தலைவரான ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) மற்றும் அவரின் சகோதரர் மாணிக்கம் ஆகியோரைச் சித்தரிக்கிறது.

கடுமையான மோதலுக்குப் பிறகு, சக்திவேல் அமரன் என்ற சிறுவனைக் காப்பாற்றி, தன் சொந்த மகனைப் போல வளர்க்கிறார். இருப்பினும், சக்திவேல் மீது ஒரு கொலை முயற்சி மேற்கொள்ளப்படும்போது, ​​அமரன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இது பழிவாங்கும் மற்றும் மாற்றமடையும் விசுவாசங்களின் ஒரு கதைக்களத்தை அமைக்கிறது.

இந்தத் தலைசிறந்த சினிமா படைப்பின் பின்னணியில் உள்ள கதையை அறிய, தக் லைஃப் – தி அசெம்பிளி ஆஃப் லெஜண்ட்ஸ் நேரலை ஒளிபரப்பை 31 மே 2025, மாலை 5.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*லிருந்து கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

Exit mobile version