Site icon அநேகன்

தெங்கு ஸப்ருல் விவகாரத்தில் கவனம் தேவை! பி.கே.ஆருக்கு ரபிஸி எச்சரிக்கை.

கோலாலம்பூர், ஜூன் 2-
பி.கே.ஆரில் இணைய, முதலீட்டு, வர்த்தகம், தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸ் எண்ணம் கொண்டுள்ள நிலையில், அவரை சேர்த்துக்கொள்வதில், அக்கட்சி கவனமுடன் இருக்க வேண்டுமென, முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி எச்சரிக்கை விடுத்தார்.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உடன்படிக்கையில், தோழமைக் கட்சிகளிடையே உறுப்பினர்கள் கட்சி மாறுவது குறித்து தெளிவாக விவரிக்கப்படவில்லை என்றாலும், அந்நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்.

கட்சித் தாவல் நடவடிக்கை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்த டத்தோ ஸ்ரீ ரபிஸி, அம்னோவைச் சேர்ந்தவர் பி.கே.ஆரில் இணைவாரேயானால், அந்நடவடிக்கை எங்கே போய் முடியும் என வினவினார்.

இதுப்போன்ற விவகாரங்கள், ஒருமைப்பாட்டு அரசாங்க அளவில் கலந்துப்பேசப்பட வேண்டும் என்றாரவர்.

Exit mobile version