Site icon அநேகன்

டி.ஏ.பி. நல்லவர் போல் வேடமாடும் கட்சி! – ம.சீ.ச. தாக்கு

கோலாலம்பூர், ஜூன் 2-
மக்களின் நலனை முன்னிறுத்தி எழுப்பப்படும் கேள்விகளை பொறுத்தக்கொள்ள முடியாததால், ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து ம.சீ.ச.வை வெளியேறும்படி, டி.ஏ.பி. கட்சியின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் திமிர்த்தனமாக பேசுகின்றார்.

ம.சீ.ச.வின் இளைஞர் பிரிவு தகவல் பிரிவு தலைவர் நியோ சூ சியோங், அந்த பதிலடியை வழங்கியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, டி.ஏ.பி. சுயநலத்துடனும் நல்லவர் போலவும் வேடமாடி வருகின்றது.

முகமூடியை கழற்றி, தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்காக, பிளவுகளையும் தூண்டிவிடும் போக்கையையும் வெளிப்படுத்தியமைக்கு அக்கட்சிக்கு, தாம் நன்றிக்கூறிக்கொள்வதாகவும் நியோ சூ சியோங் அவராது பேஸ்புக் பதிவில் கூறினார்.

சரியான தரவுகள் இன்றி, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை விமர்சித்துவரும் ம.சீ.ச. தலைவர் டத்தோ ஸ்ரீ வீ கா சியோங்கின் போக்கை இதற்குமுன்பு சாடியிருந்த ஷாரேட்ஸான், அரசாங்கத்திலிருந்து ம.சீ.ச. விலக வேண்டுமென அறிவுறுத்தினார்.

அவரது அக்கூற்று தொடர்பில், நியோ சூ சியோங் அவ்வாறு பதிலுரைத்தார்.

Exit mobile version