Site icon அநேகன்

நாட்டு மக்களின் ஒற்றுமையை விட, தமக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு வேறெதுவும் இல்லை! பேரரசர்

கோலாலம்பூர், ஜூன் 2-

மலேசியர்கள் ஒற்றுமையுடன் இந்நாட்டில் வாழ வேண்டும். தமது பிறந்தநாளில் அதைவிட சிறப்புக்குரிய பரிசு வேறெதுவும் இல்லையென, பேரரசர் சுல்தான்  இப்ராஹிம் தெரிவித்தார்.

அண்மையக் காலமாக, நாட்டில் மக்களிடையே பிளவுகளும் கருத்து மோதல்களும் நிகழ்ந்துவரும் நிலையில், அத்தகைய சூழல் மிக ஆபத்தானது எனவும் பேரரசர் நினைவுறுத்தினார்.

ஆகையால், தத்தம் கட்சி சார்ந்த உள்விவகாரங்களில், அனைத்து தலைவர்களும் கவனமுடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டின் நிலைத்தன்மைக்கு ஊறுவிளைப்பதோடு சமூகத்தில் கருத்துமோதல்களுக்கு வித்திடக்கூடிய உணர்வுப்பூர்வ விவகாரங்களில், சமுதாய தலைவர்கள் அனைவரும், அரசியல் செய்யக்கூடாது.

நாட்டில் அதிகமான கட்சிகளும் அக்கட்சிகளுக்குள்ளேயே, பல பிரிவினைகளும் உள்ளன. அவற்றால், மக்களும் பிளவுப்படுவதோடு, வெறுப்புணர்வு கொள்ள நேரிடும். ஆகையால், எதை செய்வதாக இருந்தாலும், தீர யோசித்து செய்ய வேண்டுமென, இன்று நடைபெற்ற தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், பேரரசர் வலியுறுத்தினார்.

Exit mobile version