Site icon அநேகன்

அமைச்சர் பதவி பற்றி அம்னோ மட்டுமே முடிவெடுக்க  முடியாது! 

கோலாலம்பூர், ஜூன் 2-

தெங்கு ஸஃப்ருல் அம்னோவில் இருந்து விலகியுள்ளதால் அவர் வகித்து வந்த அமைச்சர் பதவியை அம்னோவிடமே திருப்பித் தர வேண்டுமென்று டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருப்பது மிகவும் வினோதமாக இருப்பதாக மஇகா வியூக பிரிவு தலைவர் டத்தோ தினாளன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முன்னணி கூட்டு அமைப்பு என்பதால் எந்த விவகாரமும் தோழமைக் கட்சிகளின் ஒப்புதலோடுதான் வெளியிடப்பட வேண்டுமென்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைச்சரவைப் பதவிகளை அம்னோ மட்டுமே எடுத்துக் கொள்வதில் எந்தவித நேர்மையும் இல்லையென்றும் அந்தப் பதவியை மசீசவுக்கோ அல்லது மஇகாவுக்கு விட்டுக் கொடுக்க ஸாஹிட்டுக்கு மனம் வரவில்லை என்பதை தினாளன் கடுமையாகச் சாடினார்.

அமாட் ஸாஹிட்டின் நடவடிக்கையானது தோழமைக் கட்சிகளின் நட்புறவை உதாசீனப் படுத்தும் விதமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

 

Exit mobile version