Site icon அநேகன்

சைகை மொழி பெயர்ப்பாளர் டான் லீ பீ  ஏ.எம்.என்.விருது பெற்றார்! 

கோலாலம்பூர், ஜூன் 2-

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சைகை மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வரும் டான் லீ பீ (64) மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்த நாளையொட்டி அஹ்லி மங்கு நெகாரா எனப்படும்  ஏ. எம்.என். விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற மாமன்னரின் பிறந்த நாளையொட்டி மாமன்னர் சுல்தான் இப்ராகிமிடமிருந்து டான் லீ பீ இந்த விருதைப் பெற்றார்.

“இதனை மிகப் பெரிய அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த மகிழ்ச்சியால் எனக்கு அழத் தோன்றுகிறது. இதற்காக எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பெர்னாமாவிடம் விவரித்தார்.

“சைகை மொழி பெயர்ப்பாளராக வேண்டும் என்பது எனது கனவல்ல. பேசும் ஆற்றலை இழந்த எனது அன்பு தங்கைக்காக இதனை நான் கற்றுக் கொண்டேன்”

இந்த மொழியை இன்னும் ஆழமாகக் கற்றுக் கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் சைகை மொழி பெயர்ப்பாளரானேன். பின்னர் தொலைக்காட்சி செய்திகளுக்கு இப்பணியை வழங்கத் தொடங்கினேன்.

இன்று வரை முழு ஈடுபாட்டுடன் அதனை மேற்கொண்டு வருகிறேன் என்றார் டான் லீ பீ.

 

 

Exit mobile version