Site icon அநேகன்

தனது கணவருடன் நூருல் இசா மெக்கா பயணம்

ஷா ஆலம், ஜூன் 3-
இஸ்லாமியர்களின் 5 கோட்பாடுகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற, பி.கே.ஆர். கட்சித் துணைத்தலைவர் நூருல் இசா அன்வார், அவரது கணவர் யின் ஷாவ் லூங்குடன் மெக்கா புறப்பட்டார்.

டிக்டோக்கில் நூருல் இசாவுக்கு ஆதரவான நூருல் இசா’ஸ் ஃபேன்ஸ் பக்கத்தில், இன்று அதிகாலையில், அத்தகவல் காணொலி வாயிலாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய போது, நூருல் இசா இவ்வாண்டு மெக்காவுக்கு செல்லும் அவரது அவாவை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக, துணைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தலில், பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியை வீழ்த்திய பிறகு, நூருல் இசா மேற்கொண்டுள்ள இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Exit mobile version