Site icon அநேகன்

அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கிய கூட்டத்தில் துன் மகாதீர் இருந்தார்! -ஏ.ஜி.சி.

கோலாலம்பூர், ஜூன் 3-
இந்நாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்த போது, அவருக்கு முழு பொது மன்னிப்பை வழங்க நடத்தப்பட்ட பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில், அந்நாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பங்கேற்றிருந்தார்.

தேசிய சட்டத்துறை – ஏ.ஜி.சி. அதனை உறுதிப்படுத்தியது.

கடந்த 2018ஆம் மே 16ஆம் தேதி, காலை மணி 11க்கு, கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் கூட்டரசு பிரதேச கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகியவற்றை உட்படுத்திய கூட்டரசு வாரியத்தின் 51ஆவது கூட்டம் நடைபெற்றது.

நாட்டின் அப்போதைய பேரரசர் ஐந்தாவது சுல்தான் முஹம்மட்டின் தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது.
அதில், துன் மகாதீர் நேரில் பங்கேற்றிருந்தார். முழுப்பொது மன்னிப்பைக் கோரி, அன்வார் செய்திருந்த விண்ணப்பத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அன்வார் உடனடியாக அன்றைய நாளில் விடுவிக்கப்பட்டார்.

சட்டத்துறை தலைவரும், பொது மன்னிப்பு வாரியம் பரிசீலணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக வழங்கியிருந்ததாக, இன்றைய அறிக்கையில், ஏ.ஜி.சி கூறியுள்ளது.

அன்வாருக்கு பொதுமன்னிப்பை வழங்குவதற்கான கூட்டம் நடத்தப்படவில்லை என துன் மகாதீர் பேசும் காணொலி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

எதிர்க்கட்சியினர் அக்காணொலியை பகிர்ந்துவரும் சூழலில், ஐந்தாவது சுல்தான் முஹம்மட்டின் முந்தைய முடிவு செல்லுபடியாகுமா என்ற கேள்வியை எழுப்பிய நிலையில், ஏ.ஜி.சி அந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Exit mobile version