Site icon அநேகன்

பெர்டானா புத்ராவில் போலந்து அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு! 

புத்ரா ஜெயா, ஜூன் 10-

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள போலந்து அதிபர் அண்டிரிஜ் டூடாவிற்கு பெர்டானா புத்ராவில் இன்று அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

தமது துணைவியார் அகாதா கோர்ன் ஹாவ்சருடன் மலேசிய வருகை மேற்கொண்ட டூடாவை பெர்டானா புத்ரா வளாகத்தில் காலை மணி 10.00க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரின் துணைவியார் டத்தோ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலும் வரவேற்றனர்.

டூடா பின்னர் மேஜர் நூர் அகமது ஜாய்ம் ஜாஹாரி தலைமையிலான 3 அதிகாரிகள் மற்றும் 103 வீரர்கள் அடங்கிய முதலாவது பட்டாள மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாகிட் ஹாமிடி, பிரதமர் துறை(சட்டம்&மறு மலர்ச்சி கழகம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைட், உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர், தூதர்கள் மற்றும் அரசாங்க உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்ற பின்னர் மலேசியாவிற்கு டூடா மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தற்காப்பு, விவசாயம், ஹலால் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்துவர் என்று கூறப்படுகிறது.

 

Exit mobile version