Site icon அநேகன்

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் மீதான விசாரணை தொடரும்! 

கோலாலம்பூர், ஜூன் 11-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் விண்ணப்பத்தை இங்குள்ள உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு நஜிப் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.

இந்நிலையில் நஜிப் அனுப்பிய விண்ணப்பத்தைச் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்ததாக அரசு துணை வழக்கறிஞர் அஷ்ரப் அட்ரின் கமாரும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நஜிப்பிற்கு எதிரான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளின் வழக்கு விசாரணையை அரசு தரப்பு தொடர தயாராக இருப்பதையும் அஷ்ரப் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி தன்னுடய மூன்று ஆம் இஸ்லாமிக் வங்கி கணக்குகளில் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து மொத்தம் 27 மில்லியன் வெள்ளி பணத்தைப் பெற்றதற்காக நஜிப் மீது 3 பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தனக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து நஜிப் விசாரணை கோரினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதிச் சட்டம் 2001 இன் பிரிவு 4(1)(எ) கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நஜிப்பிற்கு எதிராக கூடுதல்பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Exit mobile version