Site icon அநேகன்

கிரிக் பேருந்து விபத்து: பேருந்து நிறுவன உரிமம் ரத்து  

கிரிக், ஜூன் 11 –

ஜூன் 9ஆம் தேதி கிரிக் தாசேக் பண்டிங்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக தரைப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

பேருந்து நிறுவனம் தனது உரிமத்தை மூன்றாம் தரப்புக்கு மாதமொன்றுக்கு 500 ரிங்கிட் கட்டணத்தில் வாடகைக்கு விட்டிருந்ததாதத் தெரிகிறது.

அந்த விபத்தில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (உப்சி ) 15 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 ரிங்கிட்டும் காயமடைந்தோருக்கு தலா 5,000 ரிங்கிட்டையும் அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version