Site icon அநேகன்

ஒருமைப்பாட்டு அரசாங்கம் வீழ்த்தப்படும் போது, யூசோப் ராவ்தர் வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும்! -ஃபாத்லி ஷாரி

கோலாலம்பூர், ஜூன் 13-

ஒருமைப்பாட்டு அரசாங்கம் என்றாவது ஒரு கவிழும். அப்போது, முஹம்மது யூசோப் ராவ்தர் தொடர்பான வழக்கு அடிமட்டம் வரையில் முழுமையாக விசாரிக்கப்படும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஃபாத்லி ஷாரி உறுதியளித்தார்.

அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக சிலர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கலாம். அப்போது, மக்கள் யாரும் ஆச்சரியப்படக்கூடாது என அவர் கூறினார்.

முஹம்மது யூசோப் தொடர்பான வழக்கை மக்கள் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவருக்கு ஏற்பட்ட நிலை, நாளை யாருக்கும் நிகழலாம்.

நடப்பு அரசாங்கம் வீழ்ந்தவுடன், நிரூபிக்கப்படாத அல்லது மிகத் துல்லியமற்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, முஹம்மது யூசோப் ராவ்தர், அநியாயமாக 9 மாதங்கள் 10 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்.

அவ்விவகாரத்தில், போலீஸ் தரப்பு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பேரில் செயல்பட்டுள்ளது.
இதுவரை முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய போலீஸ் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பரிதாபத்திற்குரியது என ஃபாத்லி ஷாரி குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவி ஆய்வாளர் யூசோப் ராவ்தரை, போதைப்பொருள் விநியோகம், போலி துப்பாக்கிகள் வைத்திருந்தது உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகளிலிருந்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

அவ்விரு குற்றங்களை நிரூபிப்பதில், அரசு வழக்கறிஞர் தரப்பு தவறிவிட்டதாக கூறி, நீதிபதி ஜமில் ஹுசின் அத்தீர்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version