புத்ரா ஜெயா , ஜூன் 13-கிள்ளான் பள்ளத்தாக்கில் சாலை நிர்மாணிப்புக்காக ஒதுக்கப்பட்ட 25 கோடி ரிங்கிட் நிதி முறைகேடு சம்பந்தமாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் டான்ஸ்ரீ ஒருவருக்குச் சொந்தமான 16 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள சொத்துகள் கையகப்படுத்தப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர் எம்) தெரிவித்தது.
செராஸில் உள்ள டான்ஸ்ரீக்குச் சொந்தமான வீட்டில் விலையுயர்ந்த கைக் கடிகாரங்கள், கைப்பைகள், தங்கக் கட்டிகள், அந்நிய நாட்டு நாணயங்கள், வைர நகைகள், சூதாட்ட மைய உபகரணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
வீட்டினுள் சிறப்பு அறை இருந்ததாகவும் ஆனால், அதில் சுடும் ஆயுதங்கள் எதுவும் இல்லையென்றும் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

