கிரிக், ஜூன் 13-
ஜூன் 9ஆம் தேதி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் 53ஆவது கிலோ மீட்டரில் உப்சி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் கொல்லப்பட்டது சம்பந்தமான வழக்கு கிரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
பேருந்தை அபாயகரமாக ஓட்டி மாணவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநர் முகமட் அமிருல் ஃபாடில் சுல்கிப்லி (39) மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஓட்டுநர் விசாரணை கோரினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

