Site icon அநேகன்

அரசு சாரா இயக்கத்தில் நிதி முறைகேடு:தலைவர் உட்பட ஐவர் கைது

ஷா ஆலம், ஜூன் 13-

சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் சோதனை நடவடிக்கையில் அரசு சாரா இயக்கம் ஒன்றில் நிதி முறைகேடு செய்ததாக அதன் தலைவரும் நான்கு செயலவை உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.

அந்தத் தலைவர் 2015 முதல் 2015ஆம் ஆண்டு வரை சம்பந்தப்பட்ட என்ஜிஓவின் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு ஆண்கள், இரு பெண் செயலவை உறுப்பினர்கள் ஆகியோரையும் எம்ஏசிசி கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து 9 லட்சம் வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பணம், தங்க நகைகள், மலாக்காவில் உள்ள 9 நில ஆவணங்கள், மலாக்கா, பினாங்கு, சிலாங்கூரில் உள்ள 4 வீட்டு மனைக்களுக்கான பத்திரங்கள் முதலியவையும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

Exit mobile version