Site icon அநேகன்

தேசியப் போலீஸ் படை தலைவர் ராஸாருதின் ஓய்வுப் பெறுகின்றார்.

கோலாலம்பூர், ஜூன் 13-

தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ராஸாருதின் ஹுசைனின் பதவிக்காலம் இம்மாதம் 22ஆம் தேதியுடன் முடிவடைகின்றது.

கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கி, ஈராண்டுகள் அவர் அப்பொறுப்பை வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பணி ஓய்வு பெறவுள்ள ராஸாருதினின் பணி ஒப்படைப்பும் மரியாதையுடன் வழியனுப்பும் நிகழ்வும் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில். வருகின்ற 20ஆம் தேதி நடைபெறுமென போலீஸ் படைக்கு நெருங்கிய தரப்பு கூறியுள்ளது.

Exit mobile version