Site icon அநேகன்

மலாய்க்காரர்களுக்கான ஜாக்காட் போன்று இந்தியர்களுக்கு எம்ஐஏ! – டாக்டர் சத்திய பிரகாஷ்

பத்துமலை , ஜூன் 15-

இந்நாட்டிலுள்ள இந்தியர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தும் பொருட்டு  மலாய்க்காரர்களுக்கான ஜாக்காட் போன்று மலேசிய இந்தியர் பொருளாதார அமைப்பு (எம்ஐஏ) திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அரசாங்கத்தையே பெரிதும் நம்பியிராமல் இந்தியர்களுக்கு இந்தியர்களே உதவிடும் வகையில் எம்ஐஏவின் செயலாக்கத் திறன் வடிவமைக்கப்படும் என்று சிலாங்கூர் இந்தியர் நிர்வாக இயக்கத்தின் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார் .

இந்திய சமுதாயத்தில் உள்ள வணிகர்கள், தொழிலதிபர்கள் தாங்கள் செலுத்தும் வரி பணத்தை எம்ஐஏவில் பங்காக செலுத்துவதன் வழி இந்தியர்களுக்கு உதவிடும் ஓர் நிதிவளமாக இந்த அமைப்பு உருமாறும் என்றார்.

இந்த அமைப்பு நாடளாவிய நிலையில் விரிவாக்கம் காணப்படும் என்று நேற்று இங்குள்ள உணவகத்தில் நடைபெற்ற இதன் சிறப்பு கூட்டத்தில் பேசுகையில் டாக்டர் சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் மானியம் தொடர்பில் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதை விடுத்து நமக்கு நாமே என்ன செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கவே எம்ஐஏ திட்டத்தைத் தான் முன்மொழிந்ததாக அவர் சொன்னார் .

இது தொடர்பான பரிந்துரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பார்வைக்கு விரைவில்  கொண்டு செல்லப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி உட்பட பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version