Site icon அநேகன்

மறுமணம் புரிந்தார் வான் சைஃபுல்!

ஷா ஆலம், ஜூன் 15-

பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான், நேற்று சனிக்கிழமை மஸ்லினா சோப்ரி என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார்.

தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தமது திருமண விழா எளிமையான முறையில் சிறப்பாக நடந்தேறியதாகவும் அதில் கலந்துக்கொண்டவர்களுக்கும் அவரது பேஸ்புக் பதிவில் நன்றியைக் கூறிக்கொண்டார்.

டத்தோ வான் சைபுலின் திருமணத்தில், பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணி தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் உள்பட முக்கிய பிரமுகர்களும் அவரது நண்பர்களும் கலந்துக்கொண்டனர்.

டத்தோ வான் சைபுலின் முன்னாள் மனைவி டத்தின் அலேனா ஒமார், உடல்நலக்குறைவால் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலையில் காலமானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version