கோலாலம்பூர், ஜூன் 16-
பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு மாற்றாக, புதியவரை நியமிப்பது குறித்து கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது நாள் வரையில், பொருளாதார அமைச்சராக திறம்பட பணியாற்றியமைக்காக, டத்தோ ஸ்ரீ ரஃபிஸிக்கு அவர் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டார்.
ரஃபிஸியின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற பொறுப்பை, வேறொரு அமைச்சருக்கு வழங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பிரதமர் சுருக்கமாகக் கூறினார்.
பி.கே.ஆர். கட்சித் தேர்தலில் கண்ட தோல்வியை அடுத்து பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து டத்தோ ஸ்ரீ ரஃபிஸியும் இயற்கை வளம் மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் பொறுப்பிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹ்மட்டும் விலகுவதாக, கடந்த மே மாதம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவ்விருவரும் அம்முடிவை பரிசீலிக்க வேண்டுமென கடந்த சனிக்கிழமை டத்தோ ஸ்ரீ அன்வார், வலியுறுத்தியிருந்தார்.

