பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16-
மாராங் பாஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அகமது சம்சுரி மொக்தார் விலகியது கட்சியில் உயர் பதவியைக் குறி வைத்தே என்று கூறப்படுகிறது.
தான் நீண்ட காலமாக வகித்து வந்த மாராங் பாஸ் தலைவர் பொறுப்பை அகமது சம்சுரி விட்டுக் கொடுத்தது பாஸ் கட்சிக்குப் புத்துயிரூட்டுவதற்காக அல்ல. மாறாக, வரும் 16 ஆவது பொதுத்தேர்தலில் மிகப் பெரிய அரசியல் இலக்கை அடைவதற்காகவே என்று பேராசிரியர் அஸ்மி ஹாசான் கருத்துரைத்தார்.
“இது ஓர் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்” என்றார் அஸ்மி.

