Site icon அநேகன்

ரோன் 95 பெட்ரோல் உதவித்தொகை மறுசீரமைப்பு: பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு இருக்காது! -அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 16-

அரசாங்கத்தின் மானிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பெரும்பான்மை மக்களைப் பாதிக்கும் வகையில் ரோன்95 பெட்ரோல் விலையில் எந்த உயர்வும் இருக்காது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

எரிபொருள் மானியம் முழுமையாக நீக்கப்படும் என்ற கூற்று தவறானது. மாறாக, மானிய மறுசீரமைப்பு மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் இலக்கு வைத்து, படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றாரவர்.

ரோன்95 விலையில் 85 முதல் 90 சதவீத மக்களைப் பாதிக்கும் எந்த உயர்வும் இருக்காது என கூறிய பிரதமர்,

மானியம் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி மக்களிடையே கவலையை ஏற்படுத்த முயலும் சில தரப்பினரின் செயல்களை சாடினார்.

எதிர்க்கட்சிகள் கூறும் எதுவும், மக்கள் கஷ்டப்படுவதாகக் காட்டுவதற்காக மட்டுமே செய்யப்படும் ஒரு வித்தையாகும்.

மானிய மறுசீரமைப்பால் ஏற்படும் சேமிப்பு, கல்வி, சுகாதாரம், தேவையானோருக்கு உதவி போன்ற பொது சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

ஏழைகளுக்கு உதவவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த சுகாதார சேவைகளை வழங்கவும் போதுமான வளங்களைப் பெறவும் அரசாங்கம், மானிய மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதாக பிரதமர் விவரித்தார்.

 

Exit mobile version