Site icon அநேகன்

முன்னாள் ஏஜி மீது வழக்கறிஞர் ஷாபி போலீஸில் புகார்! 

கோலாலம்பூர், ஜூன்16-

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் பேரரசரின் அரச மன்னிப்பு (அட்டெண்டம்) சம்பந்தமாகத் தவறாகப் பதிலளித்திருக்கும் முன்னாள் சட்டத்துறை தலைவர் அமாட் தெரிருடின் சாலே மீது நஜிப் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நஜிப் தமது தண்டனை காலத்தை வீட்டில் இருந்தபடியே முடிக்க பேரரசர் ஆணையொன்றை 2014 ஜனவரி 29ஆம் தேதியன்று வெளியிட்டிருந்ததாக வழக்கறிஞர் ஷாபி குறிப்பிட்டிருந்தார்.

அப்படியொரு அட்டெண்டம் உண்மையிலேயே வெளியிடப்பட்டிருக்கும் போது, அப்படியொரு உத்தரவை முன்னாள் பேரரசர் அப்துல்லா வெளியிடவில்லை என்று தாருரிடின் கூறியிருப்பது குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று ஷாபி குற்றம் சாட்டினார்.

 

Exit mobile version