Site icon அநேகன்

கார்பன் வரிக்கு முன்பு ரோன் 95 எரிவாயு மானியத்தில் சீர்திருத்தம்! -அமீர் அம்சா

கோலாலம்பூர், ஜூன் 17-

நாட்டில் கார்பன் வரி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ரோன் 95 எரிவாயுக்கான மானியத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதனை இரண்டாம் நிதியமைச்சர் அமீர் அம்சா தெரிவித்தார்.

இதன் பொருட்டு வரும் 2026ஆம் ஆண்டில் கார்பன் வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் சொன்னார்.

அதற்கு முன்பு எரிபொருள் மானியம் தொடர்பான விவகாரத்தைத் தீர்க்க வேண்டும் என்று தலைநகரில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோது அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.

கார்பன் வரி என்பது பசுமை நிற வாயுக்களின் வெளியீடுகளைக் குறைப்பதற்காக விதிக்கப்படும் ஒரு வரியாகும்.

அடுத்த ஆண்டுக்குள் இரும்பு, எஃகு மற்றும் எரிசக்தி துறைகளுக்குக் கார்பன் வரியை அமல்படுத்த வேண்டும் என்று 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

Exit mobile version